மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி கமாண்டண்ட் எக்சிகியூட்டிவ் லிமிட்டெடின் துறைசார் போட்டித் தேர்வு, 2025 எழுத்துத் தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
25 JUN 2025 7:53PM by PIB Chennai
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 27.04.2025 அன்று நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி கமாண்டண்ட் எக்சிகியூட்டிவ் லிமிட்டெடின் துறைசார் போட்டித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் உடல் தரநிலைத் தேர்வுகள், உடல் திறன் சோதனைகள், மற்றும் மருத்துவ தரநிலை சோதனைகள் ஆகியவற்றிற்குத் தற்காலிகமாகத் தகுதி பெற்றுள்ளனர்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை இதற்கான தேதி, நேரம் மற்றும் இடம் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கும். இந்த பட்டியலில் உள்ள எவரும், இது தொடர்பான எந்த தகவலையும் பெறவில்லை என்றால், அவர்கள் உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் உதவி கமாண்டண்டின் இறுதித் தேர்வு/நியமனம், தில்லி உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள திவாகர் பாண்டே & மற்றவர்கள் எதிர் உள்துறை அமைச்சகம் & மற்றவர்கள் ரிட் மனு (சிவில்) எண் 5877/2022-ன் இறுதி முடிவுக்கு உட்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139686
***
AD/RB/DL
(रिलीज़ आईडी: 2139715)
आगंतुक पटल : 4