விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

"ஆக்ஸியம்-4 திட்டம், இந்தியாவின் வளர்ந்த பாரத லட்சியத்திற்கு முன்னோடியாக அமைகிறது" என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்

Posted On: 25 JUN 2025 6:21PM by PIB Chennai

“ஆக்ஸியம்-4 திட்டம், இந்தியாவின் வளர்ந்த பாரத லட்சியத்திற்கு  முன்னுதாரணமாக அமைகிறது”.

 

இன்று அனுசந்தன் பவனில் ஆக்ஸியம் 4 ஏவுதலின் நேரடிக் காட்சிகள் ஒலிபரப்பான போது ​​சுபன்ஷு சுக்லா மற்றும் மூன்று விண்வெளி வீரர்களைப் பாராட்டி, எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இவ்வாறு தெரிவித்தார்.

 

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்கன் மற்றும் பெருமைமிக்க தருணத்தில், ஆக்ஸியம்-4 திட்டத்தின் துவக்கம், வளர்ந்த பாரதமாக மாறுவதற்கான நாட்டின் பயணத்தில் ஒரு பெரிய எழுச்சியைக் குறிக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) செல்லும் நான்கு பேர் கொண்ட சர்வதேச குழுவினரின் ஒரு பகுதியாக உள்ளார்.

 

“இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் ஸ்தாபக தந்தை டாக்டர் விக்ரம் சாராபாய் மற்றும் சதீஷ் தவான் ஆகியோரின் கனவை நனவாக்கும முயற்சி, இப்போது பிரதமர் திரு  நரேந்திர மோடியின் தலைமையில் நிறைவேறி வருகிறது” என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

பிரதமர் திரு மோடி தலைமையிலான அரசு அறிமுகப்படுத்திய துணிச்சலான சீர்திருத்தங்களே இந்த மைல்கல்லுக்குக் காரணம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இவை இந்தியாவை தொழில்நுட்பத்தைப் பின்பற்றும் நாடு என்ற நிலையில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியில் சமமான மற்றும் மரியாதைக்குரிய உலகளாவிய பங்காளியாக மாற்றியுள்ளன.

 

இந்த நேரடி ஒலிபரப்பு நிகழ்வில் தெற்கு ஆஸ்திரேலியாவின் ஆளுநர் மேதகு பிரான்சிஸ் ஆடம்சன் ஏ.சி, இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் திரு. பிலிப் கிரீன் உள்ளிட்ட மூத்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன், பல்வேறு அறிவியல் துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள்   பங்கேற்றனர்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139645

 

***


AD/RB/DL


(Release ID: 2139708) Visitor Counter : 4
Read this release in: English , Urdu , Marathi , Hindi