தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் தளத்தில் இடைத்தேர்தல் தொடர்பான செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன
Posted On:
25 JUN 2025 5:02PM by PIB Chennai
கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் அண்மையில் நிறைவடைந்த இடைத்தேர்தல்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய டிஜிட்டல் தளத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மே மாதம் 4-ம் தேதி, ஆணையத்தின் தற்போதைய பயன்பாட்டில் உள்ள 40-க்கும் மேற்பட்ட மொபைல் செயலி மற்றும் இணையதள பயன்பாடுகளை ஒருங்கிணைத்து, ஒரு புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இடைத்தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் புதிய டிஜிட்டல் தளத்தின் சில பகுதிகள் வெற்றிகரமாக செயல்படுவது கண்டறியப்பட்டது. இந்தப் புதிய டிஜிட்டல் தளம் வரும் வாரங்களில் முழுமையான செயல்பாட்டிற்கு வரும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்தூர் மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து இதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர்கள் மற்றும் பிற தரப்பினரின் நலனுக்காக தேர்தல் தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் வெளியிடும் வகையில் புதிய மின்னணு தளத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139577
**
(Release ID: 2139577)
AD/TS/SV/KPG/KR/DL
(Release ID: 2139663)