தேசிய மனித உரிமைகள் ஆணையம்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி சிறைகளில் இரண்டு நாட்களில் மூன்று கைதிகள் உயிரிழந்ததாக கூறப்படும் புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
Posted On:
25 JUN 2025 3:30PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சிறைக்காவலில் இருந்த மூன்று கைதிகள் 2025 ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களில் ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு ஆண் மருத்துவரும் ஒரு பெண் கைதியும் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகவும், அதே நேரத்தில் வாரணாசி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றொருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்னைகள் இச்சம்பவங்களால் எழும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு அம்மாநில சிறைத்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை, பிரேத பரிசோதனை அறிக்கைகள், மூன்று கைதிகளின் ஆரம்ப கட்ட சுகாதார பரிசோதனை அறிக்கைகள் மற்றும் மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கைகள் ஆகியவை காவல் துறையினரின் அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
----
(Release ID: 2139501)
AD/TS/SV/KPG/KR/DL
(Release ID: 2139656)