தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

379 களப் பணியாளர்களுக்கான 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது

Posted On: 23 JUN 2025 4:29PM by PIB Chennai

வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான (களப் பணியாளர்கள்) 13-வது தொகுதி பயிற்சி இன்று புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில்  தொடங்கியது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார்  துவக்கவுரையாற்றி இந்தப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

  வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்தல்கள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, 1951, வாக்காளர் பதிவு விதிகள் 1960, தேர்தல் நடத்தை விதிகள், 1961 மற்றும் அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிடும் அறிவுறுத்தல்களின்படி கண்டிப்பாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கு இந்தப் பயிற்சிகள் அவசியம் என்று அவர் கூறினார். எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டத்தை விட வெளிப்படையானது எதுவும் இருக்க முடியாது என்றும், இந்தியாவில் தேர்தல்கள் சட்டத்தின்படிதான் நடத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

இந்தப் பயிற்சியில் உத்திரப்பிரதேசத்தில் இருந்து 111, மத்தியப் பிரதேசத்தில் இருந்து 128, நாகாலாந்தில் இருந்து 67, மேகாலயாவில் இருந்து 66 மற்றும் சண்டிகரில் இருந்து 7  என மொத்தம் 379 அலுவலர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று உள்ளனர்.

ஜனவரி 6-10, 2025 வரை சிறப்பு சுருக்க திருத்தம் பயிற்சி முடிந்த பிறகு, மேகாலயா, நாகாலாந்து, மத்தியப் பிரதேசம், சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து எந்த மேல்முறையீடுகளும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளலாம்.

வாக்காளர் பதிவு, படிவம் கையாளுதல் மற்றும் தேர்தல் நடைமுறைகளை கள அளவில் செயல்படுத்துதல் ஆகியவற்றில் பங்கேற்பாளர்களின் நடைமுறை புரிதலை மேம்படுத்துவதற்காக இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களுக்கு தகவல் தொழில்நுட்பக் கருவிகள் குறித்த நடைமுறைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. மாதிரி வாக்குப்பதிவுகள் உட்பட  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட்கள் பற்றிய தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் மற்றும் பயிற்சியும் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

புதுதில்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தால், கடந்த மூன்று மாதங்களில் 5,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை  மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

---

(Release ID: 2138909)

AD/TS/KPG/DL


(Release ID: 2139016) Visitor Counter : 4
Read this release in: Urdu , English , Hindi , Bengali