புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இந்திய சூரிய எரிசக்தி கழகம் 11வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியது
प्रविष्टि तिथि:
23 JUN 2025 2:39PM by PIB Chennai
இந்திய சூரிய எரியசக்தி கழகம் 11-வது சர்வதேச யோகா தினத்தை புதுதில்லியில் உள்ள அழகிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுந்தர் நர்சரியில் கொண்டாடியது. இதில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளர் திரு சஞ்சீவ் சோப்ரா, நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திருமதி நிதி கரே, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு சந்தோஷ் குமார் சாரங்கி மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
யோகா பயிற்சியானது உடல் மற்றும் மன நலத்தை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. நீடித்த மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டுடன் சூரிய எரிசக்தி நிறுவனம் இதுபோன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திரு குணால் சூடான் தலைமையில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் சான்று அளிக்கப்பட்ட யோகக் கலை நிபுணர்கள் யோகப் பயிற்சியை நடத்தினர்.
இயற்கையின் பாரம்பரிய பின்னணியில் நடைபெற்ற இந்த யோகக்கலை நிகழ்ச்சி, இந்த ஆண்டு "ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்ற கருப்பொருளுடன் நடைபெற்றது. ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த யோகப் பயிற்சி அமைந்துள்ளது.
தூய்மையான எரிசக்தி மேம்பாடு மட்டுமின்றி பணியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே ஆரோக்கியமான வாழ்வியல் முறையின் சமநிலையை பராமரிக்க இந்திய சூரிய எரிசக்தி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
***
(Ref ID 2138870)
AD/TS/SV/LDN/KR/DL
(रिलीज़ आईडी: 2138978)
आगंतुक पटल : 21