சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா வந்துள்ள சிலியின் கோடெல்கோ குழுவை இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் வரவேற்றது

प्रविष्टि तिथि: 23 JUN 2025 1:06PM by PIB Chennai

சிலியின் அரசுக்குச் சொந்தமான தாமிரச் சுரங்க நிறுவனமான கோடெல்கோ-வின் (கார்ப்பரேசியன் நேஷனல் டெல் கோப்ரே)  பிரதிநிதிகளை இந்துஸ்தான் காப்பர் நிறுவனம்  இன்று அதிகாலை புதுதில்லியில் வரவேற்றது.

சிலி காப்பர் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்துஸ்தான் காப்பர் நிறுவன அலகுகள் மற்றும் அலுவலகங்களுக்குச் சென்று பல்வேறு சுரங்க மற்றும் செயல்பாட்டு அம்சங்களை மதிப்பிடுவார்கள். இது போன்ற மதிப்பீடு இந்தியாவில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை ஆகும். நிபுணர்களின் மூன்று வார கால பயணம் அறிவுப் பகிர்வு மற்றும் மதிப்பு கூட்டலுக்கான வாய்ப்புகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கோடெல்கோ சுரங்க நிபுணர்கள் குழுவில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் இடம் பெற்றுள்ளனர். 

1. ஏஞ்சலோ ஜியோவானி கியூசெப் அகுய்லர் கேட்டலானோ - புவியியல் மற்றும் ஆய்வு

2. ஜோஸ் ராமோம் அபாட்டே பெரெஸ் - புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம்

3. கார்லோஸ் அபெலார்டோ வில்செஸ் டோனோசோ - டெய்லிங் மேலாண்மை

4. ஜார்ஜ் லூயிஸ் எஸ்பிண்டோலா லாண்டா - புவி தொழில்நுட்ப பொறியியல்

5. செர்ஜியோ ஜோனாதன் பிச்சாட் ஹெரிக்வெஸ் - புவி உலோகவியல்

இந்த முயற்சி 01.04.2025 அன்று பிரதமர் திரு  நரேந்திர மோடி மற்றும் சிலி அதிபர்  திரு கேப்ரியல் போரிக் ஃபோன்ட் முன்னிலையில் எச்சிஎல்  மற்றும் கோடெல்கோ இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகும்.  இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், பணியாளர் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டோடு, ஆய்வு, சுரங்கம் மற்றும் கனிம நன்மைகளை எளிதாக்குவதற்கான அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறது. எச்சிஎல்  தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. சஞ்சீவ் குமார் சிங் மற்றும் கோடெல்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ரூபன் அல்வராடோ விகர் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தனர்.

---

(Release ID: 2138846)

AD/TS/KPG/KR


(रिलीज़ आईडी: 2138893) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia