மக்களவை செயலகம்
நாடாளுமன்றம் மற்றும் மாநில/யூனியன் பிரதேச சட்டமன்ற அமைப்புகளின் மதிப்பீட்டுக் குழுக்களின் தேசிய மாநாட்டை மக்களவை சபாநாயகர் ஜூன் 23, 2025 அன்று மும்பையில் தொடங்கி வைக்கிறார்.
Posted On:
22 JUN 2025 8:15PM by PIB Chennai
மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மகாராஷ்டிராவின் மும்பையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில/யூனியன் பிரதேச சட்டமன்ற அமைப்புகளின் மதிப்பீட்டுக் குழுக்களின் தேசிய மாநாட்டை ஜூன் 23, 2025 அன்று தொடங்கி வைப்பார். நிகழ்ச்சியின்போது, மக்களவைத் தலைவர், நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் 75வது ஆண்டு நினைவுப் பத்திரத்தையும் வெளியிடுவார்.
மகாராஷ்டிர முதல்வர், திரு. தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிர துணை முதல்வர்கள் திரு. ஏக்நாத் ஷிண்டே மற்றும் திரு. அஜித் பவார், மகாராஷ்டிர சட்ட மேலவைத் தலைவர் பேராசிரியர். ராம் சங்கர் ஷிண்டே, மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தலைவர் திரு. ராகுல் நர்வேகர் மற்றும் இந்திய நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் டாக்டர். சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க அமர்வில் உரையாற்ற உள்ளனர்.
இரண்டு நாள் மாநாட்டின் போது, இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநில / யூனியன் பிரதேச சட்டமன்ற அமைப்புகளின் மதிப்பீட்டுக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், 'நிர்வாகத்தில் செயல்திறன் மற்றும் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காக பட்ஜெட் மதிப்பீடுகளை திறம்பட கண்காணித்தல் மற்றும் மறுஆய்வு செய்வதில் மதிப்பீட்டுக் குழுவின் பங்கு' என்ற கருப்பொருளில் ஆலோசனை செய்வார்கள்.
மகாராஷ்டிர ஆளுநர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் ஜூன் 24, 2025 அன்று நிறைவுரையை நிகழ்த்துவார். மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், இந்திய நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் திரு சஞ்சய் ஜெய்ஸ்வால், மகாராஷ்டிர சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு அம்பதாஸ் தன்வே ஆகியோர் நிறைவு அமர்வில் உரையாற்ற உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2138756
AD/BR/KR
(Release ID: 2138756)
(Release ID: 2138808)
Visitor Counter : 3