சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ராஜஸ்தானின் ஆல்வாரில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் - மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பங்கேற்பு
Posted On:
21 JUN 2025 5:39PM by PIB Chennai
சர்வதேச யோகா தினத்தையொட்டி மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் ராஜஸ்தானின் ஆல்வாரில் நடைபெற்ற யோகா அமர்வில் பங்கேற்றார். ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரதமரின் சர்வதேச யோகா தின நிகழ்வின் நேரடி ஒளிபரப்பைப் பங்கேற்பாளர்களுடன் இணைந்து அவர் பார்த்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சகத்தின் செயலாளர் திரு தன்மய் குமார் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்தின் கீழ் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காற்றுத் தர மேலாண்மை ஆணையம் மற்றும் அமைச்சகத்தின் அமைப்புகளைச் சேர்ந்த 130 இடங்களில் யோகா அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தது.
டேராடூனில், வன ஆராய்ச்சி நிறுவனம் ஹரித் யோகா' இனப்படும் இயற்கையிடன் இணைந்து யோகா செய்யும் நிகழ்வை நடத்தியது. அதில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி இணையமைச்சர் திரு டோகன் சாஹு பங்கேற்றார்.
புது தில்லியில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், உடல்நலம், நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் யோகா அமர்வை நடத்தியது.
****
(Release ID: 2138451)
AD/PLM/RJ
(Release ID: 2138702)