சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் சார்பில் புகழ்பெற்ற பாரம்பரிய தளங்களில் யோகா நிகழ்வு

Posted On: 21 JUN 2025 10:29AM by PIB Chennai

சுரங்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், 11வது சர்வதேச யோகா தினத்தை இன்று நாடு தழுவிய உற்சாகத்துடனும் மக்கள் பங்கேற்புடனும் கொண்டாடியது. இந்த ஆண்டின் கருப்பொருளான "ஒரே பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கு யோகா" என்ற அடிப்படையில் நல்வாழ்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, யோகா மூலம் புவி அறிவியல் பரவலுக்கான அதன் உறுதிப்பாடு ஆகியவற்றை இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டின.

கொல்கத்தாவில் உள்ள இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் மத்திய தலைமையகத்தில், அதன் தலைமை இயக்குநர் ஜெனரல் திரு அசித் சாஹா, சான்றளிக்கப்பட்ட பயிற்றுனர்கள் தலைமையிலான யோகா அமர்வைத் தொடங்கி வைத்தார்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிராந்திய மற்றும் மாநில அலுவலகங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் செயல்பாட்டு கள முகாம்கள் உட்பட 46 இடங்களில் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் 50 யோகா அமர்வுகளை ஏற்பாடு செய்தது. சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் உட்பட பல இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் இந்திய புவியியல் ஆய்வு நிறுவன அதிகாரிகள், உள்ளூர் மக்கள், மாணவர்கள், பொதுமக்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

****

 

(Release ID: 2138226)

AD/PLM/RJ


(Release ID: 2138632)