கலாசாரத்துறை அமைச்சகம்
புராண கிலாவில் 11-வது சர்வதேச யோகா தினம கொண்டாட்டம்
Posted On:
21 JUN 2025 12:57PM by PIB Chennai
புதுதில்லியின் வரலாற்று சிறப்புமிக்க புராண கிலாவில், கலாச்சார அமைச்சகம், இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பன்சூரி ஸ்வராஜ், இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன தலைமை இயக்குநர் திரு யதுபீர் சிங் ராவத், பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்ற முக்கிய நிகழ்வின் நேரடி ஒளிபரப்பையும் கண்டனர்.
நாடு தழுவிய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள அதன் கட்டுப்பாட்டில் உள்ள 81 நினைவுச்சின்னங்களில் யோகா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தது. இது இந்தியாவின் பாரம்பரிய தளங்களுடன் யோகாவின் கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்பை வலுப்படுத்துகிறது.
****
(Release ID: 2138289)
AD/PLM/RJ
(Release ID: 2138386)