தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
“இந்திய தொலைத்தொடர்பு சேவைகள் செயல்திறன் குறித்த அறிக்கை”
இடுகை இடப்பட்ட நாள்:
19 JUN 2025 4:54PM by PIB Chennai
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில் தொலைத்தொடர்பு, கேபிள் டிவி, டிடிஎச், வானொலி ஒலிபரப்பு சேவைகளின் செயல்திறன் குறித்த விவரங்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. சேவை வழங்கும் நிறுவனங்களால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையின் முழுமையான விவரங்கள் இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் (www.trai.gov.in மற்றும் http://www.trai.gov.in/release-publication/reports/performance-indicators-reports) வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஏதேனும் ஆலோசனைகள் அல்லது கருத்துக்கள் இருந்தால், அது குறித்து இந்த ஆணையத்தின் ஆலோசகர் திரு விஜய்குமாரிடம் தெரிவிக்கும் வகையில் அவரது +91-20907773 என்ற தொலைபேசி எண்ணிலும், advfea1@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2137690
-----
AD/SMB/SV/KPG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2137768)
வருகையாளர் எண்ணிக்கை : 23