வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        குப்பைக் கிடங்கு சீரமைப்பில் ராஜ்கோட் நகரின் முன்மாதிரி செயல்பாடு - 20 ஏக்கர் குப்பை கிடங்கு நகர்ப்புற காடாக மாற்றம்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                19 JUN 2025 1:21PM by PIB Chennai
                
                
                
                
                
                
                தூய்மை இந்தியா இயக்கம் 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  2016-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் கழிவு மேலாண்மை தொடர்பான அணுகுமுறை குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டது. நிலையான கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம், குப்பைக் கிடங்குகளை சீரமைக்கும் முயற்சியை நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.  
இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ராஜ்கோட் நகரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக செயல்படுகிறது. இந்த நகரில் ஒவ்வொரு நாளும் சுமார் 700 டன் திடக்கழிவுகள் சேர்கின்றன.  இவை அனைத்தும் நக்ராவாடி குப்பை கொட்டும் இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம். காலப்போக்கில், அந்த இடத்தில் சுமார் 16 லட்சம் டன் குப்பைக் கழிவுகள் குவிந்தன. இதையடுத்து அந்த இடத்தை சீரமைக்க ராஜ்கோட் மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய முயற்சியை மேற்கொண்டது.  கழிவுகளை அங்கிருந்து அகற்றுவது மட்டுமின்றி, அந்தப் பகுதியை ஒரு தூய்மையான, பசுமையான நகர்ப்புற காடாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு ஒரு திட்டத்தை செயல்படுத்தியது. அதன் மூலம் 20 ஏக்கர் நிலத்தை மீட்டெடுக்க வழிவகை செய்யப்பட்டது.
 
நக்ராவாடி சீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக, கழிவுகளை அகற்ற விரிவான ஆய்வு நடத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து மேம்பட்ட இயந்திரங்களைப் பயன்படுத்தி குப்பைகள் அகற்றப்பட்டன. குப்பைகள், எரிபொருள் மற்றும் உரமாக மாற்றப்பட்டன. அங்கு மியாவாகி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 2.35 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டன. அங்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன அமைப்புகள் நிறுவப்பட்டன.
இந்த திட்டம் பல்வேறு நிலைகளில் குறிப்பிடத்தக்க நல்ல சுற்றுச்சூழல் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. காடு வளர்ப்பு மற்றும் கழிவு பதப்படுத்துதல் மூலம் காற்றின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த திட்டம் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. இந்த திட்டத்தின் வெற்றி, சவாலை எதிர்கொள்ளும் பிற நகரங்களுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.  
*******
(Release ID: 2137594)
AD/SMB/PLM/RJ/DL
                
                
                
                
                
                (Release ID: 2137752)
                Visitor Counter : 6