பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓய்வு பெற்ற ராணுவத் தளபதிகளுடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துகிறது ராணுவம்

प्रविष्टि तिथि: 17 JUN 2025 4:40PM by PIB Chennai

ஓய்வு பெற்ற ராணுவத் தளபதிகள் பங்கேற்கும் சிந்தனை முகாம் புதுதில்லியில் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தலைமையில் இன்று (17.06.2025) தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உரையாடல் முன்னாள் ராணுவத் தளபதிகளின் அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்துவதற்கான ஒரு தளமாக அமைந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதல் முறையாக நடைபெறும் இந்த உரையாடல் நிகழ்வில், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வரவேற்புரையாற்றுகையில், இந்திய ராணுவத்தின் தற்போதைய மாற்றங்களை எடுத்துரைத்தார். எதிர்காலத்திற்கான போக்குகளை வடிவமைப்பதில் முன்னாள் ராணுவத் தலைமை தளபதிகளின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

விமானப்படை, கடற்படை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து இன்று விவாதங்கள் நடைபெற்றன. முன்னாள் ராணுவத் தளபதிகளிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறப்பு தொழில்நுட்பங்கள், நவீனமயமாக்கல் முயற்சிகள் குறித்தும் இதில் எடுத்துரைக்கப்பட்டது.

***

(Release ID: 2136939)
PLM/RR/KR

 


(रिलीज़ आईडी: 2136981) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Malayalam