பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஆர்டிஓ மற்றும் ஐஐடி தில்லி ஆகியவை இணைந்து 1 கி.மீ.க்கும் அதிகமான தூரத்திற்கு குவாண்டம் என்டாங்கிள்மென்ட் தொழில்நுட்பம் அடிப்படையில் பாதுகாப்பான தகவல்தொடர்பு சோதனையை நடத்தியது

प्रविष्टि तिथि: 16 JUN 2025 5:18PM by PIB Chennai

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும்  தில்லி இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமும் இணைந்து புதிய தகவல் தொடர்பு சேவைக்கான பரிசோதனையை மேற்கொண்டன. குவாண்டம் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஃப்ரீ-ஸ்பேஸ் கண்ணாடி இழைநார் இணைப்பு மூலம் ஒரு கி.மீ. தொலைவுக்கும்  கூடுதல் தூரத்தில் பாதுகாப்பான தகவல் தொடர்பு சேவையின் பயன்பாடு குறித்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனை வினாடிக்கு கிட்டத்தட்ட 240 பிட்கள் என்ற பாதுகாப்பான விசை விகிதத்தை அடைந்தது. குவாண்டம் பிட் பிழை விகிதம் 7%-க்கும் குறைவாக உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் பாதுகாப்பான தொடர்பு, நீண்ட தூர குவாண்டம் விசை விநியோகம், குவாண்டம் கட்டமைப்புகளின் வளர்ச்சி மற்றும் அதன் எதிர்கால இணையம் உள்ளிட்ட அம்சங்களில் சைபர் பாதுகாப்பு தொடர்பான நிகழ்நேர பயன்பாடுகளுக்கு வழி வகுக்கிறது. இந்த முயற்சிகள் தேசிய அளவில் குவாண்டம் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான நாட்டின் விரிவான நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136702

***

 

AD/TS/SV/AG/DL

 


(रिलीज़ आईडी: 2136769) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Malayalam , Urdu , हिन्दी