சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச புலிகள் கூட்டமைப்பின் முதல் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார்

प्रविष्टि तिथि: 16 JUN 2025 5:33PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி மலைப்பாங்கான நாடுகளில் புலிகள் உள்ளிட்ட பெரும் பூனைகளைப் பாதுகாப்பதற்காக, சர்வதேச பெரும் பூனைகள் கூட்டமைப்பின்  முதல் மாநாடு இன்று புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில், பூடான், கம்போடியா எஸ்வதினி, கினியா, இந்தியா, லைபீரியா, சுரினாம், சோமாலியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 9 நாடுகளின் அமைச்சர்கள் குழு பங்கேற்றது.

மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், கடந்த பத்தாண்டுகளில் வனவிலங்கு பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ள  இந்தியா, உலகளவில் தலைமை தாங்கும் இடத்திற்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்ஏழு பெரிய புலிகளின் இனங்கள் மற்றும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களை பாதுகாப்பதற்கும், நமது சுற்றுச்சூழல் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும், பருவநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கும் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச புலிகள்  கூட்டமைப்பின் தலைவராக திரு பூபேந்தர் யாதவை இந்த மாநாடு ஒருமனதாக அங்கீகரித்தது. மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சர்வதேச பெரும் புலிகள்  கூட்டமைப்பானது புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை, ஜாகுவார் உள்ளிட்ட ஏழு பெரிய பூனை இனங்களை பாதுகாக்கும் 95 நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136712

***

AD/TS/GK/LDN/KR/DL


(रिलीज़ आईडी: 2136768) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Malayalam