பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடலோர காவல் படைக்காக கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட ஐந்தாவது விரைவு ரோந்து கப்பல் ‘அச்சல்’ அறிமுகப்படுத்தப்பட்டது
Posted On:
16 JUN 2025 3:48PM by PIB Chennai
இந்திய கடலோர காவல் படைக்காக கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் எட்டு கப்பல்களில் ஐந்தாவது விரைவு ரோந்து கப்பலான ‘அச்சல்’, கப்பல் சேவையை 2025 ஜூன் 16 அன்று கோவாவில் கடலோர காவல்படை தளபதி (மேற்கு கடற்கரை), கூடுதல் தலைமை இயக்குநர் ஜெனரல் அனில் குமார் ஹர்போலா முன்னிலையில் திருமதி கவிதா ஹர்போலா தொடங்கி வைத்தார்.
அமெரிக்க கப்பல் போக்குவரத்து பணியகம் மற்றும் இந்திய கப்பல் போக்குவரத்து பதிவேட்டின் கடுமையான இரட்டை தர சான்றிதழின் கீழ் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட இந்த விரைவு ரோந்து கப்பல் கட்டுமானம் 60%-க்கும் அதிகமான உள்நாட்டு உபரி பாகங்களைக் கொண்டுள்ளது. இந்தக் கப்பல் 52 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும், 320 டன் எடையுடன் செல்லக்கூடியதாகும். சிபிபி-அடிப்படையிலான உந்துவிசை அமைப்பால் இயக்கப்படும் இந்தக் கப்பல், மணிக்கு 27 நாட்ஸ் வேகத்தை எட்டும்.
பாதுகாப்பு, கண்காணிப்பு, கட்டுப்பாடு ஆகிய முதன்மைப் பணிகளைக் கொண்டுள்ள ‘அச்சல்’, விரைவு ரோந்து கப்பலானது கடற்கரை சொத்துக்கள் மற்றும் தீவுப் பகுதிகளைப் பாதுகாக்கத் தயாராக உள்ளது. இந்திய கடலோர காவல்படைக்கும் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையில் இதன் அறிமுகம் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது. இது பாதுகாப்பு உற்பத்தியிலும் தற்சார்பை நோக்கிய கூட்டுப் பயணத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது.
மொத்தம் ரூ.473 கோடி செலவிலான இந்தக் கப்பல்கள் கட்டும் திட்டத்தின் மூலம், கணிசமான வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. பல்வேறு தொழிற்சாலைகளிலும் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதன் மூலமும் உள்ளூர் தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136647
***
AD/TS/IR/RR/KR/DL
(Release ID: 2136765)
Visitor Counter : 3