நிதி அமைச்சகம்
மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் லேவில் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்
Posted On:
15 JUN 2025 9:04PM by PIB Chennai
லடாக்கின் லேவில் நடைபெற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். நிதி உள்ளடக்கம், கடைசி மைல் வரை கடன் வழங்குதல் மற்றும் லடாக்கின் தனித்துவமான கலாச்சார அடையாளத்தை பரந்த வளர்ச்சி கட்டமைப்பில் ஒருங்கிணைப்பதில் இந்திய அரசின் உறுதிப்பாட்டை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர், சிறு தொழில்முனைவோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகக் கூறினார்.
இந்த நிகழ்வின் போது, முத்ரா, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கம், ஸ்டாண்ட்-அப் இந்தியா, பிரதமரின் விஸ்வகர்மா போன்ற முக்கிய மத்திய திட்டங்களின் கீழ் சுமார் ₹5.13 கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன.
லடாக்கில் 64,000க்கும் மேற்பட்ட முத்ரா கடன்களும் 600க்கும் மேற்பட்ட ஸ்டாண்ட்-அப் இந்தியா கடன்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன, இதில் லே மாவட்டத்தில் மட்டும் குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது என்று திருமதி சீதாராமன் எடுத்துரைத்தார்.
லடாக் அலுவல் மொழிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் உள்ளூர் மொழிகளை அங்கீகரிப்பது, பெரும்பாலான பழமையான பௌத்த நூல்கள் பாலி மொழியில் இருப்பதால், பாலிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது போன்ற சமீபத்திய முயற்சிகளை மேற்கோள் காட்டி, உள்ளூர் அடையாளத்தில் வளர்ச்சியை நங்கூரமிட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இது பிராந்தியத்தின் வளமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
பாரத்நெட்டின் அறிமுகம், செல்பேசி வலையமைப்பின் விரிவாக்கம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் திட்டங்கள் உட்பட உள்கட்டமைப்பு, டிஜிட்டல் இணைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை திருமதி சீதாராமன் கோடிட்டுக் காட்டினார்.
லடாக்கிற்கான மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் உறுதிப்படுத்திய நிதியமைச்சர், தாய்மொழியின் வளர்ச்சியை அவசியமாகக் கொண்டு, வாழ்வாதாரத்தில் கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் கல்விக்கான அணுகலின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2136525
AD/BR/KR
***
(Release ID: 2136548)
Visitor Counter : 8