புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் காற்றாலை மின்சக்தி முதன்மையாக உள்ளது: மத்திய அமைச்சர் திரு பிரல்காத் ஜோஷி
Posted On:
15 JUN 2025 4:59PM by PIB Chennai
உலக காற்றாலை தினம் 2025- ஐ முன்னிட்டு, மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்காத் ஜோஷி இன்று (15.06.2025) பெங்களூருவில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றினார். புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கான மத்திய இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், கர்நாடக அரசின் எரிசக்தி அமைச்சர் திரு கே.ஜி. ஜார்ஜ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு பிரல்காத் ஜோஷி, இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் முதன்மை மையமாக காற்றாலை மின்சக்தி உள்ளது என்று கூறினார்.
உலகளாவிய தொழில்திறை உற்பத்தி மையமாக மாற, இந்தியா மின்துறையில் முன்னேற வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார். சூரிய சக்தி, காற்றாலை அல்லது வேறு எந்த வகையான மின்சக்தியாக இருந்தாலும் அதை அரசு ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார். 2030-ம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து நமது மின் திறனில் 50% என்ற அளவையும் 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கையும் அடைய இந்தியா உறுதி கொண்டுள்ளது என அவர் கூறினார். இந்த இலக்குகளை அடைவதற்கு காற்றாலை மின்சக்தி மையமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
உலக அளவில் நான்காவது பெரிய காற்றாலை மின் உற்பத்தித் திறன் கொண்ட இந்தியா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார். 10 ஆண்டுகளில் இந்தியா உலக அளவில் மூன்றாவது பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக மாறி இருப்பதாகவும் அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி கூறினார்.
உலக காற்றாலை தினம் பற்றி:
காற்றாலை மின் உற்பத்தியின் வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் ஜூன் 15-ம் தேதி உலகளாவிய காற்றாலை தினம் கொண்டாடப்படுகிறது. அரசின் நிலையான கொள்கை ஆதரவுடன், காற்றாலை மின் துறை கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளது. புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மின் விநியோக நிறுவனங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், காற்றாலை தொழில் துறையினர், கல்வித்துறையினர், சிந்தனையாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். நாட்டின் காற்றாலை மின்சக்தி வளர்ச்சியின் முன்னேற்றம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்த உரையாடல்களை எளிதாக்குவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
****
(Release ID: 2136468)
AD/TS/PLM/RJ
(Release ID: 2136499)