சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
இந்தியா இணக்கத் தீர்வுக்கான நடுவர்மன்ற மையமாக மாறும் -மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால்
Posted On:
15 JUN 2025 5:24PM by PIB Chennai
உலகளாவிய இணக்கத் தீர்வுக்கான நடுவர்மன்ற மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், சட்ட அமைச்சகமானது ஓஎன்ஜிசி, இந்திய சர்வதேச நடுவர் மையம் ஆகியவற்றுடன் இணைந்து, நேற்று (ஜூன் 14, 2025) புது தில்லியின் பாரத் மண்டபத்தில் நிறுவன நடுவர் மன்றம் குறித்த தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது.
ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த மாநாட்டில் சட்டம், நீதித் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், நடுவர் மன்ற நிபுணர்கள் கலந்து கொண்டனர். வணிக தகராறு தீர்வுக்கான விருப்பமான முறையான நிறுவன நடுவர் மன்றத்தை ஊக்குவிப்பதும், இந்திய சர்வதேச நடுவர் மையத்தை உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த நடுவர் மன்றமாக முன்னிலைப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
இதில் பேசிய மத்திய சட்டத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், இந்தியாவின் சட்ட பாரம்பரியத்தைச் சுட்டிக் காட்டினார். மத்தியஸ்த நடுவர் மன்றம் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று அவர் கூறினார். அரசின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில், இந்தியா உலகளாவிய நடுவர் மன்ற மையமாக மாறும் என்று அவர் கூறினார்.
தொடக்க அமர்வில் இந்திய சர்வதேச நடுவர் மையமான ஐஐஏசி-யின் (IIAC) தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமந்த் குப்தா உரையாற்றினார். இந்தியாவில் நிறுவன நடுவர் மன்றத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் முக்கிய சவால்களை எதிர்கொண்டு நீக்குவது குறித்துப் பேசினார். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகமான ஓஎன்ஜிசி (ONGC) தலைவர் திரு அருண் குமார் சிங் பேசுகையில், நடுவர் மன்றம் தொடர்பான தொழில்துறை கண்ணோட்டத்தை எடுத்துரைத்தார். சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறை செயலாளர் டாக்டர் அஞ்சு ரதி ராணா, சட்ட சீர்திருத்தங்கள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார்.
தொடக்க அமர்வைத் தொடர்ந்து, மாநாட்டில் நான்கு தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன. ஒவ்வொன்றும் நிறுவன நடுவர் மன்றத்தின் முக்கிய அம்சங்களை ஆராய்ந்தன.
****
(Release ID: 2136475)
AD/TS/PLM/RJ
(Release ID: 2136487)