வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், இன்று ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரை சந்தித்தார்
Posted On:
12 JUN 2025 7:05PM by PIB Chennai
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு. மனோகர் லால், ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து இன்று (ஜூன் 12, 2025) விரிவான ஆய்வு நடத்தினார். ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரும், துறைக்குப் பொறுப்பான அமைச்சருமான திரு. உமர் அப்துல்லாவும் இதில் கலந்து கொண்டார். ஸ்ரீநகரில் நடந்த ஆய்வுக் கூட்டம், நகர்ப்புற வளர்ச்சியை விரைவுபடுத்துதல், உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் வலுப்படுத்துதல், நகரங்களின் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள பிற முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து கவனம் செலுத்தியது. இந்தக் கூட்டத்தில் மத்திய மற்றும் யூனியன் பிரதேச அரசுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் நகர்ப்புற திட்டங்களான அடல் புத்தாக்கம் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான இயக்கம் (அம்ருத் & அம்ருத் 2.0), நவீன நகரங்கள் இயக்கம், நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் , பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம், தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வநிதித் திட்டம் மற்றும் பிரதமரின் இ -பஸ் சேவை உள்ளிட்ட முக்கிய நகர்ப்புற மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயல்படுத்தல் மற்றும் முன்னேற்றத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.
மத்திய அரசின் அனைத்து நகர்ப்புற திட்டங்களின் பலன்களையும் ஜம்மு- காஷ்மீர் மக்கள் பெற்று வருவதாகவும், மத்திய அரசும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கூட்டுறவு கூட்டாட்சி உணர்வை நிலைநிறுத்தி, அதன் ஒட்டுமொத்த உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்களை விரைவுபடுத்துவதாகவும் அமைச்சர் கூறினார்.
ஒவ்வொரு திட்டத்தையும் விரிவாக ஆய்வு செய்த அமைச்சர், உத்திசார் திட்டமிடல் மற்றும் அரசு-தனியார் கூட்டாண்மை மூலம் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் நிலையான நகரமயமாக்கலை ஊக்குவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136015
---
AD/RB/DL
(Release ID: 2136047)