எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு - காஷ்மீரில் மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் ஆய்வு செய்தார்

Posted On: 12 JUN 2025 5:33PM by PIB Chennai

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் மின்சாரத் துறை செயல்பாடுகள் குறித்து மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு மனோகர் லால் இன்று ஸ்ரீநகரில் ஆய்வு செய்தார்.

ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா முதலமைச்சரின் ஆலோசகர் திரு நாசிர் அஸ்லம் வானி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர், மத்திய மாநில அரசு அதிகாரிகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மின் துறை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எதிர்கால தேவையை பூர்த்தி செய்வதற்கான வழிவகைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மின் துறையை மேம்படுத்துவதற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என அமைச்சர் உறுதி அளித்தார்.

யூனியன் பிரதேசத்தில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை மேம்பாட்டுக்கும் மத்திய அரசு தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை வழங்கும் என்று அமைச்சர் திரு மனோகர் லால் உறுதியளித்தார்.

***

(Release ID: 2135975)
AD/TS/PLM/RR/DL


(Release ID: 2136006)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi