சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோப்புகள் மற்றும் நீதிமன்ற அறைகளுக்கு அப்பால் மக்கள் சேவை: உலக ரத்ததான தினத்தைக் குறிக்கும் வகையில் சட்ட விவகாரங்கள் துறையினர் ரத்த தானம் செய்தனர்

प्रविष्टि तिथि: 11 JUN 2025 2:55PM by PIB Chennai

உலக ரத்ததான தினம் 2025-ஐ குறிக்கும் வகையில் அர்த்தமுள்ள முன்முயற்சியாக  புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறையினர் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஒத்துழைப்புடன் இன்று ரத்த தானம் செய்தனர்.

இந்த முகாமிற்கு சட்டத்துறை செயலாளர் டாக்டர் அஞ்சு ரதி ரானா முன்னிலை வகித்தார். கருணை மற்றும் சமூக நலனை வெளிப்படுத்தும் தன்னார்வ ரத்த தானத்தை அவர் ஊக்கப்படுத்தினார். துறையின் அதிகாரிகளும், ஊழியர்களும் ரத்த தானம் வழங்கினர்.

"ரத்தம் வழங்கி நம்பிக்கை அளிப்போம்: நாம் ஒன்றிணைந்து உயிர்களை காப்போம்" என்ற இந்த ஆண்டின் உலகளாவிய ரத்த தான தினத்தின் மையப்பொருளை இந்த நிகழ்வு எதிரொலித்தது. தேவைப்படுவோருக்கு பாதுகாப்பான மற்றும் போதிய அளவில் ரத்தம் வழங்குவதை உறுதி செய்ய தன்னார்வத்துடன் பணம் பெறாமல் ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக இந்த நிகழ்வு அமைந்தது.

இந்த முன்முயற்சியின் மூலம் தனது சமூக பொறுப்புணர்வு, பொதுமக்கள் நலன், மனிதாபிமான சேவை ஆகியவற்றுக்கு உறுதிபூண்டிருப்பதை சட்ட விவகாரங்கள் துறை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த துறை ரத்த தானம் மட்டும் செய்யவில்லை. பொதுமக்கள் சேவை என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளது.

*****

(Release ID: 2135638)

AD/TS/SMB/SG/KR


(रिलीज़ आईडी: 2135731) आगंतुक पटल : 35
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी