வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் சுவிட்சர்லாந்து பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இது ஐரோப்பா தடையற்ற வர்த்தக சங்கம் – வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீ்ழ் இந்தியா-சுவிட்சர்லாந்து கூட்டாண்மைக்கான உத்வேகத்தை வலுப்படுத்துகிறது

Posted On: 11 JUN 2025 2:16PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல், 2025 ஜூன் 9-10 வரை சுவிட்சர்லாந்தில் இரண்டு நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இன்று ஸ்வீடனில் தனது அதிகாரப்பூர்வ பணிகளைத் தொடங்கினார். இந்திய, ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கம் இடையே, இந்த ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்தான வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவது மற்றும் இந்தியா – சுவிட்சர்லாந்து பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து சுவிட்சர்லாந்து பயணத்தில்  கவனம் செலுத்தப்பட்டது.

இந்தப் பயணத்தின் போது, திரு கோயல், சுவிஸ் அரசு பிரதிநிதிகள், தொழில்துறையின் உயர்மட்டத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான சந்திப்புகளை நடத்தினார். இது திட்டமிடப்பட்ட ஒருங்கிணைப்புகளை வலுப்படுத்துவதையும் வர்த்தகம், முதலீடு, புதுமை கண்டுபிடிப்புகளைச் சார்ந்த வளர்ச்சிக்கான புதிய வழிகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை செயல்படுத்தலுக்காக எதிர்காலத்திற்கான திட்டமிடலை வகுப்பதற்காக, அவர் சுவிட்சர்லாந்து நாட்டின் பொருளாதார விவகாரங்கள், கல்வி, ஆராய்ச்சித் துறையின் தலைவரான ஹெலீன் பட்லிகர் ஆர்டிடாவைச் சந்தித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135624

 

----

AD/TS/IR/KPG/KR


(Release ID: 2135716)
Read this release in: English , Urdu , Marathi , Hindi