விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் விவசாயிகளை சந்தித்துப் பேசினார்

Posted On: 07 JUN 2025 7:37PM by PIB Chennai

மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இச்சாவாருக்குச் சென்று விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான் எனப்படும் வளர்ச்சி அடைந்த விவசாயத்துக்கான சங்கல்ப இயக்கத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த முயற்சி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் விஞ்ஞானிகளை இணைக்கும் நோக்கில், 'ஒரு நாடு - ஒரு விவசாயம் - ஒரு குழு' என்ற தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கியது. இதுவரை, திரு சவுகான் ஒடிசா, ஜம்மு, ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். இன்று, அவர் தனது பிறந்த இடமான செஹோரில் விவசாயிகளைச் சந்தித்தார்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு சுமார் 8 லட்சம் புதிய வீடுகளுக்கான ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்பட்டதாக அவர் அறிவித்தார். மேலும், இந்த திட்டத்திற்கான தகுதி வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளன: ₹15,000 வரை வருமானம், இரு சக்கர வாகனங்கள் மற்றும் 2.5 ஏக்கர் வரை பாசன வசதி உள்ள அல்லது 5 ஏக்கர் வரை பாசன வசதி இல்லாத நிலம் உள்ளவர்கள் இப்போது தகுதியுடையவர்களாகிறார்கள். 

லட்சாதிபதி  சகோதரி திட்டத்தின் வெற்றியை எடுத்துரைப்பதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை அமைச்சர் வலியுறுத்தினார், மேலும் பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவில் முடிப்பதாக உறுதியளித்தார். நர்மதா நீர் விரைவில் செஹோர் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களைச் சென்றடையும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2134899 

****

AD/RB/DL

(Release ID: 2134899)


(Release ID: 2134979)
Read this release in: English , Urdu , Hindi