விவசாயத்துறை அமைச்சகம்
மத்தியப் பிரதேசத்தின் செஹோரில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 JUN 2025 6:10PM by PIB Chennai
மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், இன்று மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலையில் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில், வளர்ச்சி முயற்சிகளில் தீவிரமாகப் பங்கேற்குமாறு அனைவருக்கும் திரு சௌஹான் அழைப்பு விடுத்தார், மேலும், “2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கு நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம். கிராமங்கள் மற்றும் தேசத்தின் வளர்ச்சி, மக்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் மட்டுமே இது சாத்தியமாகும். நாட்டின் வளர்ச்சி அதன் கிராமங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது.” என்று அவர் கூறினார்.
செஹோருக்கு நர்மதா நதி நீரை கொண்டு வருவதற்கான தொடர்ச்சியான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில், நர்மதா நதி நீர் இப்பகுதி மக்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் திரு சௌஹான் மேலும் கூறினார். அஷ்டா மற்றும் இச்சாவரில் உள்ள விவசாயிகளின் வயல்களுக்கு நர்மதா நதி நீரை வழங்குவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன என அவர் தெரிவித்தார்.
நகர்ப்புற மேம்பாடு குறித்துப் பேசிய திரு சௌஹான், போபால் ஒரு பெருநகர மாநகரமாக நியமிக்கப்படுவதாகவும், இரு நகரங்களும் நெருக்கமாக வளர்ச்சி அடைந்து ஒன்றாக முன்னேறும்போது இது செஹோருக்கு குறிப்பிடத்தக்க அளவில் பயனளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு மத்தியப் பிரதேசம் இந்த ஆண்டு தோராயமாக ரூ 6,262 கோடி பெறும் என்று அவர் கூறினார். நாடு முழுவதும் 1.48 கோடி பெண்கள் 'லட்சாதிபதி சகோதரிகள்' (ஆண்டுக்கு ரூ 1 லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கும் பெண்கள்) ஆகிவிட்டதாக பெருமையுடன் குறிப்பிட்ட அமைச்சர் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், ஒவ்வொரு பண்ணைக்கும் பாசன வசதிகள் விரிவுபடுத்தப்படும் என்றும், தேவையான இடங்களில் முழுமையான நீர்ப்பாசனத்தை உறுதி செய்ய முழுமையான நீர் ஆதரவு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
***
(Release ID: 2134861)
AD/TS/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2134897)
வருகையாளர் எண்ணிக்கை : 13