பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய அளவிலான சுற்றுச்சூழல் முன்முயற்சிகளுடன் உலக சுற்றுச்சூழல் தினம் 2025-ஐ இந்திய கடலோரக் காவல் படை கொண்டாடியது
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUN 2025 5:29PM by PIB Chennai
இந்திய கடலோரக் காவல் படை நாடு முழுவதும் உள்ள அதன் நிலையங்கள், மாவட்டங்கள் மற்றும் பிராந்திய தலைமையகங்களில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் உறுதிப்பாட்டுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் தொடர்ச்சியான செயல்பாடுகளுடன் உலக சுற்றுச்சூழல் தினம் 2025-ஐ கொண்டாடியது.
பிளாஸ்டிக் மாசினை எதிர்த்து முறியடிப்போம் என்ற இந்த ஆண்டின் மையக் கருத்தைகா கவனத்தில் கொண்டு இந்தியக் கடலோரக் காவல் படை, கடலோரப் பகுதிகளைத் தூய்மை செய்தல், விழிப்புணர்வு முகாம்கள், வாக்கத்தான், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், மக்களுடன் கலந்துரையாடுதல், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டது.
கடல்சார் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தையும், கடல்பகுதி மாசுபாட்டினால் ஏற்படும் விளைவுகளையும் நீடித்து நிலைக்கும் சுற்றுச்சூழல் நடைமுறைகளின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் கல்வி சார்ந்த அமர்வுகளுக்கும் இந்நாளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளி சிறார்கள், தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் மக்கள் தொண்டர்கள், பங்குதாரர்கள் குறிப்பாக கடலோரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
எதிகால தலைமுறையினரிடம் தூய்மையான, பசுமையான, ஆரோக்கிமயான பூமியை ஒப்படைப்பது என்ற தேசிய மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் இலக்குகளுக்கு ஏற்ப இந்திய கடலோரக் காவல் படையின் முன்முயற்சிகள் இருந்தன.
---
(Release ID: 2134583)
AD/TS/SMB/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2134663)
வருகையாளர் எண்ணிக்கை : 9