பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

11 ஆண்டுகளில் அரசின் துணிச்சலான முடிவுகளும், சீர்திருத்தங்களும் மத்திய அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன- மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 05 JUN 2025 4:53PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 11 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், அறிவியல் தொழில்நுட்பம் பணியாளர் நலன்,  பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், சிறப்பு பேட்டி ஒன்றில் தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அரசின் 11 ஆண்டுகால  பயணம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நிர்வாகத்துக்கான முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்று அவர் அதில் கூறினார். இந்த 11 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சியை மறுவரையறை செய்து, அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீண்டகால தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து முடிவெடுப்பதில் புதிய அளவுகோல்களை அமைத்துள்ளது என்று அவர் கூறினார். ஜிஎஸ்டி-யை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவித்தல், விண்வெளி, அணுசக்தி போன்ற உத்திசார் துறைகளை தனியாருக்கு அனுமதித்தல் என அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் கூறினார்.

நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய அவர், நிர்வாகத்தில் எளிமை கணிசமாக மேம்பட்டுள்ளதாகக் கூறினார். செயல்திறன் அடிப்படையிலான மதிப்பீடு நிர்வாகத்தில் ஒரு கலாச்சார மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்த அரசு எதிர்காலத்தை நோக்கிச் செயல்படுவதாகவும், ​​ இது தொடக்கம் மட்டுமே என்றும் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

***

(Release ID: 2134198)

AD/TS/PLM/AG/DL


(रिलीज़ आईडी: 2134316) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam