ஆயுஷ்
azadi ka amrit mahotsav

‘ஆயுஷ் நிவேஷ் சார்த்தி’ — முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் பாரம்பரிய மருத்துவத் துறைக்கான இணையதள வசதி

प्रविष्टि तिथि: 05 JUN 2025 4:59PM by PIB Chennai

பாரம்பரிய மருத்துவம் மற்றும் நல்வாழ்வுக்கான உலகின் மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு அரசு 2025 மே 29-ம் தேதிஆயுஷ் நிவேஷ் சார்த்திஎன்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. புதுதில்லியில் உள்ள  வாணிஜ்ய பவனில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல், ஆயுஷ் அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோர் இணைந்து இணைய தளத்தை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்திய ராஜேஷ் கொடேச்சா, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இணையதளம் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான தரவுகளைத் தருவதோடு அவற்றின் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது. நாட்டில் உள்ள நலவாழ்வு மையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆயுஷ் நிவேஷ் சார்த்தி என்பது இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆயுஷ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட முதலீட்டாளர்களை மையமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் தளமாகும். இந்த இணையதளம் அரசின் கொள்கைகள்ஊக்கத்தொகை குறித்த தரவுகள், முதலீடுகளுக்கு உகந்த திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம், பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான சர்வதேச முதலீடுகளுக்கு உகந்த இடமாக இந்தியாவை நிலை நிறுத்தக் கூடிய உத்திசார் நடவடிக்கையாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2134202

-----

AD/TS/SV/KPG/DL


(रिलीज़ आईडी: 2134289) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी