நிதி அமைச்சகம்
மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமனும் கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் திரு ஜீன்பெக் குலுபேவ் மோல்டோகனோவிச்சும் புதுதில்லியில் இன்று இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
Posted On:
05 JUN 2025 4:12PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமனும் கிர்கிஸ் குடியரசின் வெளியுறவு அமைச்சர் திரு ஜீன்பெக் குலுபேவ் மோல்டோகனோவிச்சும் புதுதில்லியில் இன்று இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தியா - கிர்கிஸ் குடியரசு நாடுகளிடையே பிஷ்கெக் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தம், இன்று (05.06.2025) முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தம் இவ்விரு நாடுகளுக்கிடையேயான தொழில் முதலீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
இருநாடுகளின் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், பாதுகாப்பான முதலீட்டுச் சூழலை உருவாக்குவதிலும் குறிப்பிடத்தக்க நிலை எட்டப்பட்டுள்ளதை இந்த ஒப்பந்தம் குறிப்பதாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2134169
------
AD/TS/SV/KPG/KR
(Release ID: 2134235)
Visitor Counter : 2