தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளான ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் புகார் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

प्रविष्टि तिथि: 05 JUN 2025 3:21PM by PIB Chennai

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திரநகர் காவல் நிலையத்தில் 35 வயது ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் 2025  மே 13 அன்று காவல்துறையினரால் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளாகி இறந்ததாகக் கூறப்படும் ஊடகச் செய்தியை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

இது உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவர் மீது கடும் மனித உரிமை மீறல் நடந்துள்ளது என ஆணையம் கருதுகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தெலங்கானா காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

***

(Release ID: 2134141)

AD/TS/PLM/AG/KR


(रिलीज़ आईडी: 2134173) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu