நிலக்கரி அமைச்சகம்
உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி மரக்கன்றுகள் நட்டார்
Posted On:
05 JUN 2025 2:46PM by PIB Chennai
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி அசோகா சாலையில் உள்ள தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மரக்கன்றுகள் நட்டார். தெலங்கானாவைச் சேர்ந்த பல்வேறு அரசுப் பள்ளிகளின் மாணவ-மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் உடனிருந்தனர். இவர்கள் மாநில அரசால் நடத்தப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் நிலையை பெற்றவர்கள். இவர்களின் கடின உழைப்பை அங்கீகரித்த திரு ஜி கிஷன் ரெட்டி, புதுயுக சுற்றுச்சூழல் வீரர்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொடியை ஏந்துமாறு அவர்களை கேட்டுக் கொண்டார்.
நமது சுற்றுச்சூழலைப் பசுமையாகவும், சிறந்ததாகவும் மாற்றுவதற்கு அடித்தள நிலையில் பணிபுரிவோரின் முயற்சிகளையும் அமைச்சர் பாராட்டினார். பிளாஸ்டிக் மாசுபாட்டின் தாக்கங்கள் குறித்து அதிகரித்து வரும் அறிவியல் ஆதாரங்களை எடுத்துரைப்பது இந்த ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் தினத்தின் நோக்கமாகும். தூய்மையான நீடித்த எதிர்காலத்தைக் கட்டமைக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை நிராகரிப்பது, குறைப்பது, மறு பயன்பாடு, மறுசுழற்சி செய்வது, மறு பரிசீலனை செய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறத. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைக் குறைப்பதற்கு கூட்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சகங்களை அமைச்சர் வலியுறுத்தினார்.
***
(Release ID: 2134128)
AD/TS/SMB/RR/KR
(Release ID: 2134143)