எரிசக்தி அமைச்சகம்
டெஹ்ரியில் நாட்டின் முதலாவது மாறக் கூடிய விரைவு உறிஞ்சு சேமிப்பு ஆலையின் முதலாவது அலகின் வர்த்தக ரீதியிலான செயல்பாட்டு தொடக்க தினத்திற்காக மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் பாராட்டு தெரிவித்துள்ளார்
Posted On:
04 JUN 2025 2:19PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலம் டெஹ்ரியில் உள்ள 1000 மெகாவாட் மாறக்கூடிய விரைவு உறிஞ்சு சேமிப்பு ஆலையின் முதலாவது அலகின் (250 மெகாவாட்) வர்த்தக ரீதியிலான செயல்பாடு தினம் வெற்றிகரமாகத் தொடங்கியது. இந்திய டெஹ்ரி நீர்மின் வளர்ச்சிக் கழக நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த சிறப்புமிக்க சாதனை நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது. இது நாட்டின் முதலாவது மாறக்கூடிய விரைவு உறிஞ்சு சேமிப்பு ஆலையாகவும் எந்தவொரு மத்திய பொதுத்துறை நிறுவனத்தின் மிகப்பெரிய உறிஞ்சு சேமிப்பு ஆலையாகவும் டெஹ்ரி ஆலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான செயல்பாட்டை மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை திரு. மனோகர் லால், காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், டெஹ்ரியில் உள்ள நாட்டின் முதலாவது மாறக் கூடிய விரைவு உறிஞ்சு சேமிப்பு ஆலையின் முதலாவது அலகின் வெற்றிகரமான செயல்பாடு இந்திய டெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப சாதனை மட்டுமல்ல, நாட்டின் எரிசக்தி தன்னிறைவை நோக்கிய ஒரு துணிச்சலான முன்னேற்றமாகும் என்று கூறினார். இந்தத் திட்டம் நமது மின் கட்டத்தின் ஸ்திரத்தன்மையை கணிசமாக வலுப்படுத்தும் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் ஒருங்கிணைப்பை ஆதரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133754
-----
AD/SM/SMB/IR/KPG/KR
(Release ID: 2133815)