நிதி அமைச்சகம்
புதுதில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் தலைமையகக் கட்டிடத்தை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் திரு. பங்கஜ் சவுத்ரி ஆகியோர் திறந்து வைத்தனர்
Posted On:
03 JUN 2025 8:20PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. பங்கஜ் சவுத்ரி ஆகியோர் இன்று புதுதில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) புதிய அதிநவீன தலைமையகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறைச் செயலாளர் திரு. அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் திரு. சஞ்சய் குமார் அகர்வால், உறுப்பினர் (இணக்க மேலாண்மை) திரு. மோகன் குமார் சிங், டிஆர்ஐ தலைமை இயக்குநர் திரு. அபாய் குமார் ஸ்ரீவஸ்தவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய திருமதி நிர்மலா சீதாராமன், பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்' என்ற தெளிவான அழைப்பின் உணர்வை டிஆர்ஐ அதிகாரிகள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அமலாக்க நிறுவனங்களாக, பின்வரும் மூன்று முக்கிய விஷயங்களைக் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்:
அமலாக்கத்தையும் வசதிகளையும் எதிரெதிர் முனைகளாகப் பார்க்க வேண்டாம்.
தனிமைப்படுத்தப்பட்ட மீறல்களைப் பின் தொடராமல், ஒட்டுமொத்த விஷயத்தையும் மையமாக வைத்து, முழுமையாக விசாரிக்க வேண்டும்.
அமலாக்க நடவடிக்கைகள் தரவுகளில் மட்டுமல்லாமல், தர்மத்திலும் வேரூன்ற வேண்டும்.
நாடுகடந்த பொருளாதார குற்றங்களின் சகாப்தத்தில், நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பையும், சர்வதேச சகாக்களுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துவதன் அவசியத்தை எடுத்துரைத்து, கடைசி மைலை எட்டுவதன் மூலம் முழு குழுவையும் அகற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133646
***
(Release ID: 2133646)
AD/RB/DL
(Release ID: 2133676)