தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேசம் சியாங் மாவட்டத்தில், அணை கட்டுமானப் பணியானது இடப்பெயர்வு, வாழ்வாதாரம் மற்றும் சூழலியலில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம், குறித்து செய்தி வெளியானதை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

प्रविष्टि तिथि: 02 JUN 2025 5:33PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் முன்மொழியப்பட்ட அணை கட்டுமானத்தை குடியிருப்பாளர்கள் எதிர்க்கின்றனர் என்றும், இதனால் பலர் இடம்பெயர்ந்து செல்ல நேரிடும், வாழ்வாதாரம் மற்றும் சூழலியலை இது மோசமாகப் பாதிக்கலாம் என்றும் ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது. இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள, சியாங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய ஆயுதப் படைகளை அரசு நிறுத்தியுள்ளது.

செய்தி அறிக்கையின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், மனித உரிமைகள் மீறல் தொடர்பான பிரச்சினைகளை இந்த சம்பவம் எழுப்புவதாக அமையும் என்று ஆணையம் கருதுகிறது. எனவே, அருணாச்சலப் பிரதேச தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 

2025 மே 23, அன்று ஊடகத்தில் வெளியான செய்தியின்படி, மனித உரிமை ஆர்வலரும் சியாங் விவசாயிகள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஒருவர் தலைமையில் பெகிங் கிராமத்தில் நடைபெற்ற அணை கட்டுமானத்திற்கு எதிரான போராட்டத்தில் சுமார் 400 பேர் பங்கேற்றிருந்தனர்.

***

(Release ID: 2133318)
AD/TS/IR/RR/KR/DL


(रिलीज़ आईडी: 2133350) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी