பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப்படையின் மேற்கு கட்டளைத் தலைமையகத்தின் மூத்த விமானப்படை அதிகாரியாக ஏர் மார்ஷல் ஜஸ்வீர் சிங் மான் பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 01 JUN 2025 11:48AM by PIB Chennai

ஏர் மார்ஷல் ஜஸ்வீர் சிங் மான், விமானப்படையின் மேற்கு கட்டளைத் தலைமையகத்தின் மூத்த விமானப்படை அதிகாரியாக இன்று (ஜூன் 01, 2025) பொறுப்பேற்றார். ஏர் மார்ஷல் ஜஸ்வீர் சிங் மான், தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். 1989 டிசம்பர் 16 அன்று விமானப்படையில் போர் விமானியாக அவர் பணியில் இணைந்தார். பல்வேறு வகையான போர் விமானங்களில் 3000 மணி நேரத்திற்கும் மேலாக அவர் பறந்துள்ளார். அவர் விமானத் தாக்குதல் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். தமது பணிக் காலத்தில், விமானப் படை போர் பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக இருந்துள்ளார். ஒரு விமான தளத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். விமானப்படை தலைமையகத்திலும் கட்டளைத் தலைமையகத்திலும் பல்வேறு முக்கிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார். 2017-ம் ஆண்டில் சிங்கப்பூர் விமானப்படையுடனும் 2018-ம் ஆண்டில் அமெரிக்க விமானப் படையுடனும் கூட்டு பயிற்சிப் பயிற்சிகளை இவர் நடத்தியுள்ளார்.

விமானப்படையின் மேற்குக் கட்டளையின் மூத்த அதிகாரியாக இந்தப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு அவர் விமானத் தலைமையகத்தில் ஆயுத அமைப்புகள் பிரிவு  தலைமை இயக்குநராக இருந்தார். ஏர் மார்ஷல் ஜஸ்வீர் சிங் மான் தமது சிறந்த சேவைக்காக, குடியரசுத் தலைவரின் விருதுகளான 'அதி விசிஷ்ட் சேவா பதக்கம்', 'வாயு சேனா பதக்கம்' ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

******

(Release ID: 2133093)

AD/TS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2133101) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati