தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
2024–25 நிதியாண்டில் சிறந்த சேவைக்காக, மத்திய தகவல் தொடர்பு அமைச்சருடன் சிறப்பாகச் செயல்பட்ட கிராம அஞ்சல் ஊழியர்கள் கலந்துரையாடினர்
Posted On:
30 MAY 2025 5:59PM by PIB Chennai
2024–25 நிதியாண்டில் சிறந்த சேவையாற்றிய கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் (ஜிடிஎஸ்) பாராட்டத்தக்க பங்களிப்புகளை அஞ்சல் துறை இன்று கொண்டாடியது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா புதுதில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பாளர்களுடன் நேரில் உரையாடினார். இந்தக் கூட்டத்தில் அஞ்சல் துறையின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஜிடிஎஸ்-இன் முயற்சிகளை அங்கீகரிப்பதும், மத்திய அமைச்சருடன் நேரில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை வழங்குவதும் இந்த நிகழ்வின் நோக்கமாகும். நாடு முழுவதும் உள்ள 23 அஞ்சல் வட்டங்களில் இருந்தும் மொத்தம் 33 அஞ்சல் ஊழியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர், இது இந்திய அஞ்சல் சேவை செய்யும் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் பரந்த கிராமப்புற சூழலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
கிராமப்புற இந்தியாவில் அஞ்சல் வலையமைப்பின் முதுகெலும்பாக விளங்கும் ஜிடிஎஸ் ஆற்றும் முக்கிய பங்கை மத்திய அமைச்சர் பாராட்டினார். ஜிடிஎஸ், துறையின் அடிமட்ட அளவில் செயல்படுவதால், நாடு முழுவதும் அஞ்சல் மற்றும் நிதி சேவைகளை வழங்குவதில் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார். அவர்களின் அர்ப்பணிப்பை அமைச்சர் பாராட்டினார், மேலும் கிராமத்தில் உள்ள அனைவரும் ஜிடிஎஸ்-ஐ முழுமையாக நம்புகிறார்கள் என்றும், ஜிடிஎஸ்-ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் அறிந்திருக்கிறார்கள் என்றும், முழு சமூகத்துடனும் ஆழமான தொடர்பைப் பேணுகிறார்கள் என்றும் வலியுறுத்தினார். இந்தத் தனித்துவமான உறவு ஜிடிஎஸ்-ஐ சேவை வழங்குநர்களாக மட்டுமல்லாமல், கிராமப்புற சமூகத்தின் நம்பகமான உறுப்பினர்களாகவும் ஆக்குகிறது.
இந்த நிகழ்வின் போது, கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தங்கள் அனுபவங்களையும், துறையிலிருந்து ஊக்கமளிக்கும் கதைகளையும் பகிர்ந்து கொண்டனர். அவர்களை அஞ்சல் துறையின் முக்கிய தூணாக மத்திய அமைச்சர் விவரித்தார். அவர்களின் ஈடு இணையற்ற பங்களிப்பை எடுத்துரைத்த அமைச்சர், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஊழியர்களின் பங்கு ஒப்பற்றது என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132815
****
(Release ID: 2132815)
AD/RB/DL
(Release ID: 2132919)