பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள் பங்கேற்ற பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் உயர்நிலைக் குழுக் கூட்டம்  மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்றது 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                29 MAY 2025 4:11PM by PIB Chennai
                
                
                
                
                
                
                மத்திய பணியாளர் நலன், பொது மக்களின் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் எதிர்கொள்ளும் நீண்டகால நிர்வாகம் மற்றும் பணியாளர் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். நாட்டின் புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு நிர்வாக விதிகளை எளிமைப்படுத்துவது மிக முக்கியமானது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
நடைமுறைகளை எளிமைப்படுத்துவதை டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். அனைத்து அறிவியல் - தொழில்நுட்பத் துறைகளிலும் நிர்வாக வழிமுறைகளில் அதிக சீரான தன்மையின் அவசியத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். "இந்தியாவில் ஆராய்ச்சியையும் புத்தாக்கங்களையும் எளிதாக்குவதை ஊக்குவிக்க வேண்டுமென்றால், நிர்வாகத் தடைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். 
அறிவியல் - தொழில்நுட்பத் துறையின் பொறுப்பையும் வகிக்கும் இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், அறிவியல் துறைகள் எதிர்கொள்ளும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாகக் கூறினார். தடைகளைத் தீர்க்கவும், எதிர்காலக் கொள்கை சீர்திருத்தங்களுக்கான அடித்தளத்தை அமைக்கவும் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களையும் ஒரே தளத்தில் கொண்டு வர முன்முயற்சி எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நிர்வாகத் திறனை மேம்படுத்துவதில் அரசின் பரந்துபட்ட முயற்சிகளை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், 1,600க்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்களை நீக்கி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது தொடர்பாகப் பணியாளர் நலத்துறை மேற்கொண்ட சமீபத்திய முயற்சியைக் குறிப்பிட்டார். நிர்வாக சீர்திருத்தம் தேசிய வளர்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாகும் என்று அவர் கூறினார்.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலாளர் திருமதி ரச்னா ஷா, அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR-சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் அபய் கரண்டிகர், உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன், பணியாளர் நலத்துறை கூடுதல் செயலாளர் திரு மனோஜ் திவேதி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
******
(Release ID: 2132333)
AD/TS/PLM/KPG/RR
                
                
                
                
                
                (Release ID: 2132404)
                Visitor Counter : 4