புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு ஏப்ரல் 2025 இல் 2.7% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

Posted On: 28 MAY 2025 4:00PM by PIB Chennai

2025 ஏப்ரல் மாதத்திற்கான இந்திய தொழில்துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) வளர்ச்சி விகிதம் 2.7 சதவீதமாகும். இது 2025 மார்ச் மாதத்தில் 3.0 சதவீதமாக இருந்தது.

2025 ஏப்ரல் மாதத்தில் சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே (-)0.2 சதவீதம், 3.4 சதவீதம் மற்றும் 1.1 சதவீதம் ஆகும்.

ஐஐபி-யின் விரைவு மதிப்பீடுகள் 2024 ஏப்ரல் மாதத்தில் 148.0 ஆக இருந்ததை விட 152.0 ஆக உள்ளது. 2025 ஏப்ரல்  மாதத்தில் சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தி குறியீடுகள் முறையே 130.6, 149.5 மற்றும் 214.4 ஆக உள்ளன.

2025 ஏப்ரல்  மாதத்தில் முதல் மூன்று நேர்மறையான பங்களிப்பாளர்கள் - “அடிப்படை உலோகங்களின் உற்பத்தி” (4.9%), “மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் மற்றும் பகுதி அளவிலான டிரெய்லர்களின் உற்பத்தி” (15.4%) மற்றும் “இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றின் உற்பத்தி” (17.0%) ஆகும்.

“மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் மற்றும் அரை டிரெய்லர்களின் உற்பத்தி”, “உதிரிபாகங்கள்”, “ஆக்சில்”, “வணிக வாகனங்கள்” ஆகியவை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் காட்டியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132055

*** 

AD/SM/IR/KPG/RR


(Release ID: 2132098)
Read this release in: English , Urdu , Hindi