தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

6 ஜிகா ஹெர்ட்ஸ் (குறைந்த), 7 ஜிகா ஹெர்ட்ஸ், 13 ஜிகா ஹெர்ட்ஸ், 15 ஜிகா ஹெர்ட்ஸ், 18 ஜிகா ஹெர்ட்ஸ், 21 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகள் மின் அலைவரிசை மற்றும் வி- அலைவரிசையில் நுண் அலைக்கற்றை ஒதுக்குவது குறித்த ஆலோசனை அறிக்கையை ட்ராய் வெளியிட்டுள்ளது

Posted On: 28 MAY 2025 11:16AM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), 6 ஜிகா ஹெர்ட்ஸ் (குறைந்த), 7 ஜிகா ஹெர்ட்ஸ், 13 ஜிகா ஹெர்ட்ஸ், 15 ஜிகா ஹெர்ட்ஸ், 18 ஜிகா ஹெர்ட்ஸ், 21 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகள் மின் அலைவரிசை மற்றும் மின்காந்த அலைக்கற்றையின் நுண்ணலைப் பகுதிக்குள் குறிப்பிட்ட அதிர்வெண் வரம்பு என்று  பொருள்படும் வி-அலைவரிசையில் நுண் அலைக்கற்றை ஒதுக்குவது குறித்த ஆலோசனை அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

முன்னதாக, தொலைத்தொடர்புத் துறை, 12.08.2022 தேதியிட்ட கடிதம் மூலம், 6,7,13,15,18,21 ஆகிய ஜிகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் அலைவரிசைகளில் மின்னணு மற்றும் வி அலைவரிசைகள் மற்றும் நுண்ணலை அணுகல் & நுண்ணலை  பின்புல அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான பரிந்துரைகளை அளிக்குமாறு ட்ராயிடம் கோரியிருந்தது. இது தொடர்பாக, இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் கருத்துகளைப் பெறுவதற்காக மின்னணு மற்றும் வி அலைவரிசைகள் மற்றும் நுண்ணலை அணுகல்  & நுண்ணலை  பின்புலம் ஆகியவற்றில் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த ஆலோசனை அறிக்கையை ட்ராய் வெளியிட்டது.

இது தொடர்பாக www.trai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆலோசனை அறிக்கை குறித்த எழுத்துப்பூர்வ கருத்துகள் தொடர்புடையவர்களிடமிருந்து 2025 ஜூன் 25-க்குள்ளும், எதிர்க் கருத்துகள் 2025 ஜூலை 9-க்குள்ளும் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள், எதிர்க் கருத்துகளை, முன்னுரிமை அடிப்படையில்  மின்னணு படிவத்தில் advmn@trai.gov.in என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131885

---- 

AD/SM/IR/KPG/RR


(Release ID: 2131922)
Read this release in: English , Urdu , Marathi , Hindi