நிலக்கரி அமைச்சகம்
நிதியாண்டு 2023-24- உடன் ஒப்பிடும் போது நிலக்கரி இறக்குமதி 2024-25-ல் 7.9 சதவீதம் குறைந்துள்ளது
प्रविष्टि तिथि:
27 MAY 2025 4:24PM by PIB Chennai
நிதியாண்டு 2023-24-ல் 264.53 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி என்பதுடன் ஒப்பிடும் போது நிதியாண்டு 2024-25-ல் 243.62 மில்லியன் டன் இறக்குமதி என்பது 7.9 சதவீதம் குறைவாகும். இதன் காரணமாக சுமார் 7.93 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.60681.67 கோடி) அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரித்தல், இறக்குமதியை குறைத்தல் ஆகியவற்றுக்காக வணிக ரீதியான நிலக்கரி சுரங்கம், எஃகு தொழிற்சாலைக்கான நிலக்கரி இயக்கம் உள்ளிட்ட பல முன்முயற்சிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் காரணமாக நிதியாண்டு 2023-24- உடன் ஒப்பிடும் போது நிதியாண்டு 2024-25-ல் நிலக்கரி உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
மின்சாரம், எஃகு, சிமெண்ட் போன்ற முக்கியமான தொழில்துறைகளுக்கு முதன்மை எரிசக்தி ஆதாரமாக விளங்கும் நிலக்கரி வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131632
***
AD/TS/SMB/AG/RJ/DL
(रिलीज़ आईडी: 2131712)
आगंतुक पटल : 22