தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது
Posted On:
27 MAY 2025 3:23PM by PIB Chennai
2025 மே 18 அன்று ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள லுஹாரி கிராமத்தில் ஒரு பத்திரிகையாளர் தனது வீட்டிற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளையடுத்து அது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது. ஆன்லைன் செய்தி இணையதள நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர் இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயணத்திற்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் உண்மையாக இருந்தால், மனித உரிமைகள் மீறல் என்ற கடுமையான பிரச்சினையை அது எழுப்புவதாக இருக்கும் என்று ஆணையம் கருதுகிறது. எனவே, இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஹரியானா காவல்துறை இயக்குநருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2025 மே 19 அன்று வெளியிடப்பட்ட ஊடக செய்தியின்படி, கிராமவாசிகள் பாதிக்கப்பட்டவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், பின்னர் அவர் குருகிராமில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
***
(Release ID: 2131607)
AD/TS/IR/KPG/RJ
(Release ID: 2131655)