வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மேம்பட்ட அங்கீகாரம் பெற்றிருப்போர், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழில் அலகுகள், ஏற்றுமதி தொழில் அலகுகளுக்கான ஏற்றுமதிப் பொருட்களுக்கான சுங்கம் மற்றும் வரி செலுத்துவதின் கீழ் பலன்களை அரசு மீண்டும் அளிக்கிறது
प्रविष्टि तिथि:
27 MAY 2025 9:32AM by PIB Chennai
மேம்பட்ட அங்கீகாரம் பெற்றிருப்போர், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழில் அலகுகள், ஏற்றுமதி தொழில் அலகுகளுக்கான ஏற்றுமதிப் பொருட்களுக்கான சுங்கம் மற்றும் வரி செலுத்துவதின் கீழ் பலன்களை அரசு மீண்டும் அறிவித்துள்ளது. இந்தச் சலுகைகள் 2025 ஜூன் 1 முதல் தகுதி வாய்ந்த அனைத்து ஏற்றுமதிகளுக்கும் பொருந்தும்.
உலக சந்தைகளில் இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகைகளுக்கான சலுகைகள் முன்பு 2025 பிப்ரவரி 5 வரை அளிக்கப்பட்டது. மேலும் அவற்றை மீண்டும் அமல்படுத்துவது பல்வேறு துறைகளில் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சமநிலையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 மார்ச் 31 நிலவரப்படி, ஏற்றுமதிப் பொருட்களுக்கான சுங்கம் மற்றும் வரி செலுத்தும் திட்டத்தின் கீழ் மொத்த விநியோகங்கள் ரூ.57,976.78 கோடியைக் கடந்துள்ளது. இது இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதியை ஆதரிப்பதில் அதன் குறிப்பிடத்தக்க பங்கை சுட்டிக்காட்டுகிறது. 2025–26-ம் நிதியாண்டில், இந்தத் திட்டத்தின் கீழ் அரசு ரூ.18,233 கோடியை ஒதுக்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131526
*****
AD/TS/IR/KPG/RJ
(रिलीज़ आईडी: 2131556)
आगंतुक पटल : 28