கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
2027 ஆம் ஆண்டுக்குள் 47 புதிய தேசிய நீர்வழிகள் செயல்பாட்டுக்கு வரும்; 2026 ஆம் ஆண்டுக்குள் சரக்கு அளவு ஆண்டுக்கு 156 மில்லியன் டன்களாக உயரும்: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2025 8:44PM by PIB Chennai
மும்பையில் இன்று நடைபெற்ற உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமை தாங்கினார். 2027 ஆம் ஆண்டுக்குள் 76 நீர்வழிப் போக்குவரத்துகளை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 நிதியாண்டின் இறுதிக்குள் சரக்கு அளவு ஆண்டுக்கு 156 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம், முக்கிய திட்டங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் திட்டங்கள் பற்றிய விரிவான மதிப்பாய்வை வழங்கியது.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், “இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து சூழலியலில் உள்நாட்டு நீர்வழிகள் ஒரு முக்கிய அங்கமாக உருவாகி வருகின்றன. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தேசிய நீர்வழிச் சட்டம், 2016, உள்நாட்டு கப்பல்கள் சட்டம், 2021 போன்ற கொள்கை தலையீடுகள் மற்றும் ஜல் மார்க் விகாஸ் திட்டம், அர்த்த கங்கா, ஜல்வஹாக் திட்டம், ஜல் சம்ரிதி திட்டம், ஜல்யான் & நேவிக் போன்ற பல திட்டங்களால் கூடுதலாக ஒரு மாற்றத்தை நாம் காண்கிறோம். இந்த செயல்திட்டங்கள் வெறும் கொள்கை ஆவணங்கள் அல்ல - அவை இந்தியாவை உலகளாவிய கடல்சார் சக்தியாக மாற்றுவதற்கான ஊக்கிகளாகும். மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இன்றைய சந்திப்பு, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நமது ஆறுகள் மற்றும் கடற்கரைகளின் மகத்தான பொருளாதார ஆற்றலை வெளிக்கொணர்வதற்கும் ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேம்படுத்தப்பட்ட பட்ஜெட் ஆதரவு மற்றும் கூட்டுறவு கூட்டாட்சியுடன், நாடு முழுவதும் பசுமையான, திறமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள நீர்வழி வலையமைப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம்”, என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131467
***
(Release ID: 2131467)
AD/ SM/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2131491)
வருகையாளர் எண்ணிக்கை : 23