திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் பயிற்சியில் சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கான 38வது மத்திய தொழிற்பழகுநர் கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி தலைமை தாங்குவார்
Posted On:
25 MAY 2025 1:13PM by PIB Chennai
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், மத்திய தொழில்பழகுநர் கவுன்சிலின் 38வது கூட்டத்தை நாளை (மே 26, 2025) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடத்தவுள்ளது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி தலைமையில் அக்டோபர் 2024-ல் சீரமைக்கப்பட்ட இந்த கவுன்சில், நாடு முழுவதும் தொழில் பழகுநர் பயிற்சி தொடர்பான கொள்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தக் கூட்டம் காலை 10:30 மணிக்கு விஞ்ஞான் பவனில் தொடங்கும். மத்திய அமைச்சரின் முக்கிய உரையும், அதைத் தொடர்ந்து முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை மேம்பாடுகள் குறித்த விவாதங்களும் நடைபெறும்.
டிஜிட்டல் மற்றும் மெய்நிகர் முறையில் பயிற்சி வழங்குதல்
விதிகள் திருத்தம் மூலம் பட்டப்படிப்பு பயிற்சிகளை ஒருங்கிணைத்தல், பட்டப்படிப்பு திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வரையறைகளை அறிமுகம் செய்தல்
வாடிக்கையாளர் தளங்களில் பயிற்சியாளர்களை உலக அளவில் பணியமர்த்துவதற்கான ஏற்பாடுகள்,
பணவீக்கத்துக்கு ஏற்ப மேம்பட்ட வகையில் உதவித்தொகை விகிதங்கள் மாற்றம்,
பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வடகிழக்குப் பகுதியிலிருந்து பயிற்சி பெறுபவர்களை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகள்,
புதிய பிராந்திய வாரியங்களை அமைப்பது உட்பட நிறுவனத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். சபையின் முடிவுகள் வரும் ஆண்டுகளில் இந்தியாவின் திறன் மேம்பாட்டு முன்னுரிமைகளை கணிசமாக வடிவமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சபையில் மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், தொழில்துறை (பொது மற்றும் தனியார்), கல்வித்துறை, தொழிலாளர் அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் பிரதிநிதிகள் உள்ளனர். குறிப்பிடத்தக்க உறுப்பினர்களில் பிஎச்இஎல், இந்தியன் ஆயில், டாடா குழுமம், மாருதி சுசுகி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்எஸ்டிசி, யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் கல்வி, தொழிலாளர் நலன், எம்எஸ்எம்இ, ரயில்வே, ஜவுளி போன்ற அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் அடங்குவர். பத்து முக்கிய மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி ஆலோசகர்கள் மற்றும் கல்வி, தொழிலாளர் மற்றும் தொழில்துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் சபையில் பணியாற்றுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131094
********
TS/SMB/SG
(Release ID: 2131150)