நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடன் மீட்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் கடன் மீட்பு தீர்ப்பாயங்களின் தலைமை அதிகாரிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி - மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறை ஏற்பாடு

Posted On: 24 MAY 2025 6:23PM by PIB Chennai

கடன் மீட்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் தலைவர்கள், கடன் மீட்பு தீர்ப்பாயங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறை, 2025 - ம் ஆண்டு மே 24 - ம் தேதி புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.வி.என். பட்டி கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார். இதில், மத்திய நிதிசார் சேவைகள் துறையின் மூத்த அதிகாரிகள், பல்வேறு பொது மற்றும் தனியார் துறை வங்கிகள், இந்திய வங்கிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

திருத்தப்பட்ட கடன் மீட்பு தீர்ப்பாய விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது, கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆன்லைன் அறிக்கை தாக்கல் நடைமுறை, காணொலி வாயிலாக விசாரணை மேற்கொள்ளுதல், கலப்பின முறை அடிப்படையிலான விசாரணை நடைமுறை போன்ற துறை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய முன்னெடுப்புகள் குறித்து நிதிசார் சேவைகள் துறை செயலாளர் விரிவாக எடுத்துரைத்தார்.

நிதிசார் சேவைகள் துறையின் செயல்திறனை மேம்படுத்துவது, நிதி தொடர்பான நடைமுறை சிக்கல்கள் குறித்து விரிவான விவாதங்கள் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. இந்த விவாதங்களின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:

•           கடன் மீட்பு தீர்ப்பாய விதிமுறைகளை திறம்பட செயல்படுத்துதல், 2024;

•           கடன் மீட்பு தீர்ப்பாயங்களின் மூலம் கடன் வசூல் நடவடிக்கைகளை  அதிகரிப்பதற்காக, வங்கிகளின் வலுவான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை வழிமுறைகள்;

•           உகந்த கடன் வசூல் நடைமுறைகளில் கடன் மீட்பு தீர்ப்பாயங்களில் அதிக மதிப்பிலான வாராக்கடன் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்தல்;

•           வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில் மக்கள் மன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட மாற்றுத் தீர்வு தொடர்பான வழிமுறைகளைப் பயன்படுத்துதல்;

•           கடன் மீட்பு தீர்ப்பாயங்களின் தலைமை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு தீவிர பயிற்சி அளிப்பது;

•           கடன் மீட்பு தீர்ப்பாய நடவடிக்கைகளில் பல்வேறு செயல்முறைகளுக்கான கால அளவை குறைக்க உதவிடும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல்; போன்றவை ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130960

                                                                                    ****

SM/SV/SG

 

 


(Release ID: 2130975)
Read this release in: English , Urdu , Hindi , Marathi