அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அறிவியல் துறை செயலாளர்களின் கூட்டம் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்றது
Posted On:
23 MAY 2025 5:45PM by PIB Chennai
அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க கண்டுபிடிப்புகள் போன்ற துறைகளில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதற்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கச் செய்வதற்கான பயணத்தில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மாநில அறிவியல், தொழில்நுட்பக் குழுமங்களின் வருடாந்திர ஆய்வுக் கூட்டத்தின் நிறைவு அமர்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், தொழில்நுட்பத்தை மாற்றத்திற்கான எந்திரமாகப் பயன்படுத்தி வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் தொழில்நுட்பத்தின் மையங்களாக உருவெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
30-க்கும் மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய அவர், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து கொள்வதில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130784
***
(Release ID: 2130784)
SG/TS/SV/KPG/DL
(Release ID: 2130839)