அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு மத்திய இணைமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, ஆந்திராவின் அறிவியல் மற்றும் புத்தாக்க திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்
Posted On:
23 MAY 2025 5:47PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு இன்று (23.05.2025) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, ஆந்திரப் பிரதேசத்தை நவீன தொழில்நுட்ப மையமாக மாற்றுவதற்கு மத்திய அரசின் ஆதரவைக் கோரினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான மையமாக மாநிலத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களை அவர் முன்வைத்தார்.
ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு சிஎஸ்ஐஆர் ஆய்வகத்தை நிறுவ முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். மேலும் உயிரி அறிவியலில் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை இணைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒரு பிரத்யேக உயிரி தொழில்நுட்ப பூங்கா மற்றும் உயிரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆந்திர மாநில அரசின் கோரிக்கைகள் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளால் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் உறுதியளித்தார்.
மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், ஆந்திராவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை அதிகரிக்கவும் வழி வகுப்பதாக இந்த சந்திப்பு அமைந்தது.
***
(Release ID: 2130787)
SG/TS/PLM/RR/DL
(Release ID: 2130830)