வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் 6-வது கூட்டம், புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 21 MAY 2025 5:02PM by PIB Chennai

தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் 6வது கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளர் திரு சஞ்சீவ், இந்தியப் பொருளாதாரத்தில் சில்லறை வர்த்தகப் பிரிவின் முக்கியப் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார். தேசிய சில்லறை வர்த்தகக் கொள்கையை உருவாக்குவதற்கு ஆக்கபூர்வமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பரிந்துரைகளை வழங்குமாறு வாரிய உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் தலைவர் திரு சுனில் ஜே. சிங்கி இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், 2025–26-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இருந்து  வர்த்தகர்கள் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களை மையமாக கொண்ட அறிவிப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். ஒழுங்குமுறை செயல்முறைகளை எளிமைப்படுத்துதல், நிதி உதவி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் ஒரு உகந்த வணிகச் சூழலை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், "தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் பயணம்" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு இதழ் வெளியிடப்பட்டது. இது வாரியம் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் சிறப்புகள், முன்முயற்சிகள் மற்றும் சாதனைகளை ஆவணப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2130271

***

TS/IR/AG/DL


(Release ID: 2130338)
Read this release in: English , Urdu , Marathi , Hindi