பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்வு துறை மற்றும் பொது சேவை மையங்கள் இணைந்து கிராம அளவிலான தொழில்முனைவோருடன் நேற்று நேரடி அமர்வை நடத்தியது
Posted On:
21 MAY 2025 12:23PM by PIB Chennai
மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை வலுப்படுத்தும் வகையில், மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்வு துறை மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் கிராம அளவிலான தொழில்முனைவோர்களுடன் இணைந்து மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு போர்ட்டல் (சிபிகிராம்ஸ்) மூலம் பெறப்பட்ட இபிஎப்ஓ தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஒரு நேரடி அமர்வை நடத்தின.
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்வு துறை செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ்; தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி; தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அலோக் மிஸ்ரா; சிஎஸ்சி மின்-நிர்வாக சேவை இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்சய் குமார் ராகேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த அமர்வில் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் உள்ள கிராம அளவிலான தொழில்முனைவோர் இந்த மெய்நிகர் உரையாடலில் பங்கேற்றனர்.
சிஎஸ்சி மின்-நிர்வாக சேவை இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்சய் குமார் ராகேஷ், கடைக்கோடியில் இருப்பவர்கள் குறைகளைத் தீர்ப்பதில் பொது சேவை மையங்களின் பங்கை எடுத்துரைத்தார். மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்வு துறை செயலாளர் திரு. வி. ஸ்ரீனிவாஸ், 2025 ஆம் ஆண்டில் பொது சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட இபிஎப்ஓ தொடர்பான குறை தீர்க்கும் போக்குகள் குறித்த ஒரு நுண்ணறிவு விளக்கக்காட்சியை வழங்கினார், கடைசி மைல் வரை குறை தீர்க்கும் சேவைகளை வழங்குவதில் பொது சேவை மையத்தின் கிராம அளவிலான தொழில்முனைவோரின் பங்கை வலியுறுத்தி, சிபிகிராம்ஸ் தளம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு. ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி, இபிஎப்ஓ சேவைகளில் வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப் பெறுவதற்கான எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகள், யுமாங்க்( UMANG) வழியாக யு.ஏ.என்.(UAN) உருவாக்கம் மற்றும் கணக்கு பரிமாற்றங்கள் போன்ற சமீபத்திய சீர்திருத்தங்களைக் கோடிட்டுக் காட்டினார்.
மக்களின் கவலைகளைப் புரிந்துகொள்வதற்கும் கள அளவிலான பரிந்துரைகளைச் சேகரிப்பதற்கும் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் கிராமத் தொழில்முனைவோருக்கு இடையேயான ஒரு கலந்துரையாடல் அமர்வோடு இந்த நிகழ்வு நிறைவுற்றது.
இந்த முயற்சி, அனைத்து குடிமக்களுக்கும் குறை தீர்க்கும் முறைகளை மிகவும் உணர்திறன் வாய்ந்ததாகவும், அணுகக்கூடியதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதற்கு பிரதமரால் வழங்கப்பட்ட பரந்துபட்ட ஆணையின் ஒரு பகுதியாகும்.
----
(Release ID 2130167)
TS/PKV/KPG/KR
(Release ID: 2130215)